யார் அந்த இன்ஸ்பெக்டர் ? துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்..! விசாரணைக்காக வீட்டுக்கு வந்த எஸ்.ஐ.யை ஒருவர் மிரட்டும் வீடியோ வைரல்

0 1958
விசாரணைக்காக வீட்டுக்கு வந்த எஸ்.ஐ.யை ஒருவர் மிரட்டும் வீடியோ வைரல்

சென்னை கோயம்பேட்டில் விசாரணைக்காக வீட்டுக்கு வந்த காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என வீட்டின் உரிமையாளர் மிரட்டி விரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

சீனிவாச நகர் முதல் தெருவை சேர்ந்த இளங்கோவனுக்கும் அவரது தங்கைக்கும் சொத்துப் பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இளங்கோவனால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட அவரது தங்கை கொடுத்த புகார் அடிப்படையில், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் விசாரணைக்காக சென்றார்.

அவரிடம் ஆவேசமடைந்த இளங்கோவன், “யார் அந்த ஆய்வாளர்.?, எனக்கு டி.சியைத் தெரியும் ஏசியைத் தெரியும், துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவேன் என்றெல்லாம் அவர்களிடம் அலப்பறை செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments