அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 34 அகதிகள் மீட்பு

0 1715

அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 34 அகதிகளை ஸ்பெயின் கடலோரக் காவல்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக ஆப்ரிக்காவில் இருந்து படகு மூலம் வந்த 21 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களை மீட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை கிரான் கனரியா  தீவிற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments