தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கயிறு மூலம் காரை வீட்டுடன் கட்டி வைத்த வீடியோ வைரல்

0 1906
தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

தெலங்கானாவில், மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருக்க வீட்டுடன் காரினை கயிறு கட்டி வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் சிரிசில்லா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது மாருதி ஆல்டோ கார், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க அதன் 4 பக்கங்களிலும் கயிறு கட்டி வீட்டுடன் கட்டி வைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments