ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்வி...அவைக்குறிப்பில் இருந்து நீக்க எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை, முதலமைச்சர் பதில்

0 2861

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். 

மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள ஒரு பொருளை பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், எம்.எல்.ஏவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ சுதர்சனம் வழக்குகளின் உள் செல்லவில்லை என்றும், யார் மீது சந்தேகம் உள்ளது என கூறவில்லை என்றும், வழக்கை விரைந்து முடிக்கத்தான் கூறினார் என்றும் கூறி விவாதத்தை முடித்துவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments