தாலிபான் அரசுக்குச் சீனா அங்கீகாரம்... உதவிப்பொருட்களை வழங்குவதாகச் சீனா அறிவிப்பு

0 2135

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசைச் சீனா அங்கீகரித்துள்ளதுடன் 228 கோடி ரூபாய் மதிப்பில் உதவிப் பொருட்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

உணவு, குளிர்காலத் தேவைப் பொருட்கள், மருந்துகள், தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க உள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ தெரிவித்துள்ளார்.

முதல் தொகுப்பாக 30 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். ஆப்கன் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இணையவழிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பேசிய வாங் இ, ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பொருளாதார, மனிதநேய உதவிகளை வழங்கும் கடமை மற்ற நாடுகளைவிட அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் அதிகமுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments