சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

0 2288

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என கடந்த 10 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்தது திமுகதான் என சுட்டிக்காட்டினார்.

தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதால்தான் நேரலையில் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என்றும் முதலமைச்சர் கூறினார். புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் போது நிச்சயம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments