ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற விவகாரம் ; ஆன்லைன் ரம்மி மோகத்தால் ரூ.7 லட்சம் இழந்திருப்பதாக விசாரணையில் தகவல்

0 5550
ஆன்லைன் ரம்மி மோகத்தால் ரூ.7 லட்சம் இழந்திருப்பதாக விசாரணை தகவல்

சென்னையில், ஆயுதப்படை காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயுதப்படை காவலர் வேலுச்சாமி, கடந்த 4-ஆம் தேதி அரசினர் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தன்னுடைய தொண்டைக்குழியில் வைத்து சுட்டுக் கொண்டார். முகம் முழுவதும் சிதைந்த நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது வரை கண்விழிக்க முடியாமலும் உடல் அசைவற்று இருக்கும் அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை. மேலும், தொண்டை குழியில் சுட்டுக் கொண்டதால், அவருடைய நாக்கு சிதைந்து இனி பேச முடியாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், வேலுச்சாமியின் பெற்றோர், நண்பர்களிடத்தில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி ஏழு லட்சம் வரை பணத்தை இழந்திருப்பதும், சொந்த ஊரில் வீடு கட்ட வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனை செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments