போதை பொருள் வழக்கு... ஐதராபாத்தில் நடிகர் ரவி தேஜாவிடம் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை

0 2126

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், போதை பொருள் வழக்கு தொடர்பாக ஆஜரான தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகினருக்கு  போதை பொருள் சப்ளை தொடர்பான புகார் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கு திரைபிரபலங்கள் 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறையினர், இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங், பாகுபலி நடிகர் ராணா ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் ரவி தேஜா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments