மட்பாண்டத் தொழிலாளர்கள் இனிச் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் - அமைச்சர் துரைமுருகன்

0 1921

மட்பாண்டத் தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்போர் இனிச் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, மண் பரிசோதனைக்குப் பிறகே மண் எடுக்க வேண்டும் என முன்பு விதிமுறை இருந்தது. சட்டத்திருத்தம் செய்ததை அடுத்து அரசு மண் எடுப்பதற்குச் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை.

மட்பாண்டத் தொழிலாளர்களும், செங்கல் சூளை வைத்திருப்போரும் கோரிக்கை விடுத்ததால் அவர்கள் ஒன்றரை மீட்டர் ஆழம் வரை மண் எடுக்கச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதற்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments