ஆப்கனில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சவுக்கால் அடித்து விரட்டும் தாலிபான்கள் ?

0 4504

ஆப்கனில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களை தாலிபான்கள் சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை 1996 ல் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த போது ஆப்கன் பெண்கள் கடும் கட்டுப்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை இஸ்லாமிய ஷரியத் சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்படும் என தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கன் அமைச்சரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்காக காபூலில் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தாலிபன்கள் அவர்களை சவுக்கால் அடித்து விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், வீடுகளுக்கு திரும்புமாறும் ஆப்கன் எமிரேட்டை அங்கீகரிக்குமாறும் தாங்கள் மிரட்டப்பட்டதாக கூறியுள்ளார்.   இதனிடையே உரிமைகள் நசுக்கப்படலாம் என ஆப்கன் பெண்கள் மத்தியில் அச்சம் உருவாகி உள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments