ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 3127

ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பதாக சட்டப்பேரவையில்  கூறப்பட்டதற்கு  பதிலளித்த அவர், தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறினார்.

2021-22ம் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும், அதில் உளுந்தூர்பேட்டையில் உள்ள 4ஆயிரத்து 554 விவசாயிகளும் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments