டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... ஆலோசகராக களமிறங்கும் தோனி !

0 6084

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 17-ம் தேதி ஓமனில் தொடங்க உள்ள டி-20 உலகக்கோப்பைக்கு 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரவீந்தர ஜடேஜா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், சூர்யாகுமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அணியில் இடம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments