மது அருந்த பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்

0 2162
மது அருந்த பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கோடாங்கி நாயக்கன்பட்டியில் மது அருந்த பணம் தராத தாயை அடித்துக் கொன்றதாக மகனை போலீசார் கைது செய்தனர்.

தாய் பெருமாயிடம் மது அருந்த பணம் கேட்டு மகன் ரமேஷ் அடிக்கடி ரகளை செய்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் பணம் கேட்டு ரமேஷ் ரகளையில் ஈடுபட்டதாகவும், பணம் தர பெருமாயி மறுத்த நிலையில் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பெருமாயி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ரமேஷை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments