ஸ்கூட்டரில் மறைந்து இருந்த நல்ல பாம்பு ; பாம்பு பிடித்த வீடியோ இணையத்தில் வைரல்

0 12022
ஸ்கூட்டரில் மறைந்து இருந்த நல்ல பாம்பு பிடிபட்டது

ஸ்கூட்டரில் மறைந்து இருந்த நல்ல பாம்பை, பாம்பு பிடிக்கும் நிபுணர் ஒருவர் பிடித்த வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஸ்கூட்டரின் முன்பகுதியை கம்பியால் இழுத்ததும், உள்ளே மறைந்து இருந்த நல்ல பாம்பு சீற்றத்துடன் படம் எடுத்தபடி வேகமாக வெளியே வந்தது, காண்போரை மிரள வைக்கும் விதத்தில் இருந்தது.

பின்னர் அந்த பாம்பை ஒரு தண்ணீர் கேனுக்குள் அவர் லாவகமாக அடைத்தார். தெலங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. வனத்துறை அதிகாரியான சுசாந்த நந்தா டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மழைக்காலத்தில் இது போன்று விருந்தினர்கள் வருவது இயல்புதான் என்றாலும், இவ்வாறு யாரும் மீட்பு பணியில் ஈடுபடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments