காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுக்க முயன்ற காதலி ; பெண்னை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்

0 2204
காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுக்க முயன்ற காதலி

திருவாரூரில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை, தடுத்து நிறுத்த முயன்ற காதலியை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செல்வி என்ற அந்த பெண்ணும், செம்மங்குடியைச் சேர்ந்த செந்தில்முருகனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் சென்னையில் பணிபுரிந்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் வெளிநாடு சென்றுவிட்ட செந்தில்முருகன், சொந்த ஊருக்கு வந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய தயாரானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏற்கனவே நன்னிலம் போலீசில் புகாரளித்த செல்வி, ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார். இந்த நிலையில், அய்யம்பேட்டை பகுதியில் செந்தில்முருகனுக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடப்பதை அறிந்த செல்வி, நேரடியாக மண்டபத்திற்கு சென்று தடுத்து நிறுத்த முயன்றார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, திருமணத்தை நடத்தி வைத்தனர். செந்தில்முருகனின் உறவினர் ஒருவர் அரசியல் ((விசிக)) பிரமுகர் என்பதால், அவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments