தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - முதலமைச்சருடன் டென்மார்க் குழு ஆலோசனை

0 2057
டென்மார்க்கைப் போல் கடலில் மிதக்கும் காற்றாலை அமைக்க திட்டம்

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டென்மார்க் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது.டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல இங்கும் மிதக்கும் காற்றாலைகளை அமைப்பது குறித்து முடிவு செய்வதற்காக டென்மார்க் மின்சக்தி துறை அமைச்சர் டான் ஜானிக் ஜோர்ஜென்சன் தலைமையில் 50 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது.

அந்த குழுவினர் கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.கடலில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments