துண்டிக்கப்பட்ட பச்சிளங் குழந்தையின் தலையை நாய் கவ்விக் கொண்டு வந்த விவகாரம் ; போலீசாருக்கு தகவல் அளித்த இளைஞருக்கு வலைவீச்சு

0 3334
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை

மதுரையில் பச்சிளங் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை நாய் கவ்விக் கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.பி.குளம் பகுதியிலுள்ள ஏ.டி.எம், மையத்திற்கு பணம் எடுக்க வந்த செல்லூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், பச்சிளங்குழந்தையின் தலையை நாய் கவ்விக் கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், துண்டிக்கப்பட்டு கிடந்த பிறந்த சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் நல அமைப்பினரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். குழந்தையின் தலையை நாய் கவ்விக் கொண்டு வருவதாக தகவல் கொடுத்த இளைஞரையும் தேடி வரும் போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments