தனி விமானத்தில் உலகைச் சுற்றி வரும் 19 வயது பெண் விமானி மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா வருகை

0 2130
தனி விமானத்தில் உலகைச் சுற்றி வரும் 19 வயது பெண் விமானி மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா வருகை

விமானம் மூலம் தன்னந்தனியாக உலகைச் சுற்றி வரும் 19 வயது பெண் விமானி மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா வந்தடைந்தார்.

கடந்த மாதம் 18ம் தேதி , பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ரூதெர்ஃபோர்டு அதிவேகமாகப் பறக்கும் ஷார்க் அல்ட்ராலைட்  விமானம் மூலம் உலகச் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 51,000 கிலோமீட்டர் வான் பயணத்தில் 52 நாடுகளில் தரை இறங்க திட்டமிட்டுள்ள அவர் தற்போது கோஸ்டா ரிகா தலைநகர் சான் ஜோஸ் வந்தடைந்தார்.

30 வயது பெண்மனி ஒருவர் ஏற்கனவே உலகைத் தனியாக சுற்றி வந்த நிலையில் 19 வயதே ஆன ஜாரா ரூதெர்ஃபோர்டு  அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments