துப்பாக்கியுடன் நின்றிருந்த தாலிபான்களை தைரியமாக நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பெண் - புகைப்படம் வைரல்

0 16330

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் நின்றிருந்த தாலிபானை, பெண் ஒருவர் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தாலின்பான்களின் அடக்குமுறைக்கு எதிராக, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்ற தாலிபானை, பெண் ஒருவர் துளிகூட அஞ்சாமல் நேருக்கு நேர் எதிர்நோக்கி நின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம், 1989ஆம் ஆண்டு சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, போர் டாங்குகளுக்கு முன் இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றதை நினைவுபடுத்துவதாக ஆப்கான் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments