தாலிபான்களிடம் சிக்கலைத் தீர்ப்பதற்காகச் சீனா பேச்சு - அதிபர் ஜோ பைடன்

0 2870

தாலிபான்களுடன் சில ஏற்பாடுகளைச் செய்துகொள்ளச் சீனா முயன்றுவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பேசிய அவரிடம், தாலிபான்களுக்குச் சீனா நிதியுதவி செய்வது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானதா எனச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த பைடன், தாலிபான்களிடம் சீனாவுக்கு ஒரு சிக்கல் உள்ளதாகவும், அதனால் அவர்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய முயன்று வருவதை உறுதியுடன் கூற முடியும் எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் தாலிபான் விவகாரத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்து வருவதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments