7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஹிந்தி ஆசிரியரை ஓட, ஓட விரட்டி துவைத்து எடுத்த உறவினர்கள்!

0 2452

ஆந்திராவில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹிந்தி ஆசிரியரை உறவினர்கள் ஓட, ஓட விரட்டி அடித்து துவைத்து எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

செருகூறு கிராமத்திலுள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அங்கு ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்த ரவிபாபு என்பவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறவே, ஆத்திரமடைந்த அவர்கள் உறவினர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அங்கு ஆசிரியரை ரவிபாபுவை சக ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி அடித்து துவைத்து எடுத்தனர்.

பின்னர், சக ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments