சரக்கு அடிக்க பணம் இல்லாததால் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த ஏசியை திருடிய 3 பேர் கைது

0 8647

மதுரையில், மது அருந்த பணம் இல்லாததால் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த ஏசியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தனது தொகுதி மேம்ப்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிரூட்டப்பட்ட நவீன நிழற்குடையை அமைத்து கொடுத்தார். இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி யூனிட்டை நேற்று மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

விசாரணை நடத்திய மதுரை தல்லாகுளம் போலீசார் செல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மது அருந்த பணம் இல்லாததால் ஏசியை திருடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments