தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்-வானிலை மையம்

0 2095

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments