ஸ்கூட்டருக்கு சார்ஜிங் முனையம் அமைக்க எதிர்ப்பு...லிப்டில் ஏற்றி 5ஆவது மாடிக்கு கொண்டு சென்ற உரிமையாளர்

0 6887

பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் சார்ஜிங் முனையம் அமைக்கக் குடியிருப்போர் நலச்சங்கம் அனுமதிக்காததால் ஒருவர் மின்சார ஸ்கூட்டரை லிப்டில் ஏற்றி ஐந்தாவது மாடியில் உள்ள தனது வீட்டுச் சமையலறைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

ஆட்டோ கிரிட் என்னும் அமைப்பின் துணைத் தலைவரான விஷ் காந்தி தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பற்றித் தனது லிங்க்ட் இன் கணக்கில் தெரிவித்துள்ளார்.

சார்ஜிங் முனையம் அமைப்பது குறித்துக் குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு மின்வழங்கல் நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்பு குடியிருந்த வீட்டில் சார்ஜிங் முனையம் அமைத்தபோது சார்ஜருக்கு இரண்டாயிரம் ரூபாயும், அதை மீட்டருடன் இணைக்க 11 ஆயிரம் ரூபாயும் செலவானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சார்ஜிங் முனையங்களை அமைத்தால் இந்தச் செலவைக் குறைக்க முடியும். பொதுவான சார்ஜிங் முனையம் அமைக்க விரும்பும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் அணுகினால் ஒரு யூனிட் 5 ரூபாய் என்கிற விலையில் மின்சாரம் வழங்கப்படும் எனப் பெங்களூர் மின்வழங்கல் நிறுவனத் துணைப் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments