முதலமைச்சர் மற்றும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மகளின் திருமண வரவேற்பிக்கான அழைப்பிதழை வழங்கினார் அன்புமணி

0 4569

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்த பா.ம.க இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி செளமியா அன்புமணி, வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள அவர்களது 2வது மகள் சங்கமித்ராவின் திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழை அளித்தனர்.

இதேபோல், சென்னை பசுமை வழிச்சாலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பிதழ் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments