இங்கிலாந்தில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டியவருக்கு சிறைத்தண்டனை

0 2143

இங்கிலாந்தில் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்றவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டட்டஸ்டன் நகரைச் சேர்ந்த ஆரோன் என்பவர் தனது மிட்ஷிபிஷி வாகனத்தை அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கடந்த மே மாதம் ஓட்டிச் சென்றார்.

இந்த நிகழ்வு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதன் காரணமாக அதே வழியில் செல்லும் பயணிகள் ரயில் 8 மணி நேரம் தாமதமாகச் சென்றது.

இதையடுத்து அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆரோனுக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனையும், 23 ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments