மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்..!

0 1814

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

குரேரோ மாநிலத்தின் அகாபுல்கோவில் இருந்து தென்கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவானது. இதனால், தலைநகரம் மெக்சிகோ சிட்டி வரை கடும் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால், கொட்டும் மழையிலும் குடைகளை பிடித்தவாறு மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின் தடை ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் Coyuca de Benitez பகுதியில் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments