திரிபுராவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது போலீசார் தடியடி

0 1582

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் DIET இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் மாணவர்கள் பலருக்கு கை கால் தலையில் பலத்த ரத்தகாயங்கள் ஏற்பட்டன. காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்ட காயப்பட்ட மாணவர்களுக்கு சக மாணவர்கள் தண்ணீர் ஊற்றி காயங்களை ஆற்ற முயற்சித்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. மாணவிகள் மீதும் போலீசார் தடியடி நடத்தியதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த 2 மாதமாக பயிற்சி தேர்வுகள் நடைபெறாமல் தாமதம் செய்யப்படுவதால் ஆசிரியர் காலியிடங்களில் தங்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படலாம் என்று பயிற்சி மாணவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments