மகாராஷ்ட்ராவில் கொரோனா 3ம் அலை தொடங்கியதாக அறிவிப்பு

0 5391

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் 3வது அலை வந்து விட்டதாக மும்பை மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் பெருந்தொற்றின் அளவைச் சுட்டிக் காட்டியுள்ள மேயர் கிஷோரி பெட்னேகர், வரவிருக்கும் பண்டிகைகளை மக்கள் வீடுகளில் இருந்தே கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 28 விழுக்காடு தொற்று பாதிப்பு செப்டம்பரின் முதல் 6 நாட்களில் வந்து விட்டதாகவும் கிஷோரி கூறியுள்ளார். இந்நிலையில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments