பவானிப்பூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராகப் போட்டியிட மாட்டோம்-காங்கிரஸ்

0 2166

மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

வேட்பாளரை நிறுத்தினால் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்கு சாதகமாக ஆகிவிடும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் முடிவை கட்சியின் மேலிடத்துக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதனிடையே இன்று பவானிப்பூர் தொகுதியில் தமது கட்சிப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ள மம்தா பானர்ஜி பிற்பகல் 3 மணிக்கு தொகுதியில் உள்ள திரிணாமூல் தொண்டர்களுடன் கலந்துரையாட உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments