வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட நிர்வாக அலுவலகம் முற்றுகை... விவசாயிகள் தர்ணா

0 1296

ஹரியானா மாநிலம் கர்னாலில் மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் முன்பு மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தர்ணாப் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளுடன் ஹரியானா காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர்புகை வீசி வாயிலை முற்றுகையிட்ட கூட்டத்தைக் கலைத்தனர்.

கர்னாலை விட்டு நகர மறுத்து விவசாயிகள் இரவிலும் அங்கேயே முற்றுகையிட்டனர். அப்போது, குருதுவாராவில் இருந்து லங்கர் எனப்படும் பிராசாத உணவு அவர்களுக்கு பரிமாறப்பட்டது

தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்த விவசாயிகள் இரவை அங்கேயே கழித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments