பொலிவியாவில் மலைப்பாதையில் 1,300 அடி உயரத்தில் உருண்டு விழுந்த பேருந்து 23 பேர் பலி.!

0 1335

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மினி பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

கோச்சபம்பா மாநிலத்தில் 33 பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சிறிய வளைவு ஒன்றில் திரும்பும் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முயன்ற போது மலைச்சரிவில் சறுக்கியது.

இதையடுத்து சுமார் ஆயிரத்து 300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments