ஆப்கானிஸ்தானில் தாலிபன் இடைக்கால அரசு -அமைச்சர்களாகும் தீவிரவாதிகள்

0 2237

ஆப்கான் புதிய இடைக்கால அரசுக்கு முகமது ஹசன் தலைவராகவும்  அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதில்  தேடப்படும் முக்கியத்  தீவிரவாதிகள் சிலர்  இடைக்கால அரசில் அமைச்சர்களாக்கி உள்ளனர்

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.  இதில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட்ஜாதா தலைவராகவும், முல்லா பராதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார் என்று தாலிபன்  செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் சிலர் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டு தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் ஆவார். 33 பேர் கொண்ட தாலிபன் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சருக்கும் இடமில்லை.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments