ஈரத்துணியை உலர்த்த முயன்ற வயதான தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

0 4435

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஈரத்துணியை உலர்த்தும்போது மின்சாரம் தாக்கி வயதான தம்பதி இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சின்னஅடைக்கனூரில் ராமலிங்கம் என்ற முதியவர், அவர் வீட்டு வழியாக டிவி கேபிளைத் தாங்கிச் செல்லும் இரும்பு stay கம்பி மீது ஈரத்துணியை உலர்த்துவதற்காக போட்டிருக்கிறார்.

மழை பெய்து ஓய்ந்திருந்த அந்த நேரம் இரும்புக் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. தரையில் தேங்கியிருந்த தண்ணீரில் நின்றவாறு துணியைப் போடவும் மின்சாரம் தாக்கி கூச்சலிட்டு இருக்கிறார் ராமலிங்கம்.

பதறிப்போய் அவரது மனைவி லட்சுமி அவரை பிடித்து இழுக்க முயல, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தம்பதி இருவரையும் காப்பாற்ற முயன்ற மகன், மருமகள் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments