பேரி கார்டில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த காவலர் மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கியதில் உயிரிழப்பு

0 26629

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த போக்குவரத்து தலைமை காவலர், பேரி கார்டில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த அரசுப் பேருந்து அவர் மீது ஏறி இறங்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற காவலர், மண்டேலா நகர் பகுதிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள செக்போஸ்ட் அருகே வந்த அவர், சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வைத்து இருந்த பேரி கார்டில் மோதி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து காவலர் ராஜசேகரன் மீது ஏறி இறங்கியது.

ஹெல்மெட் அணிந்திருந்த போதும், தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுக்க முற்பட்டு, கவனக்குறைவாக பைக்கை ஓட்டி வந்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments