ஆன்லைன் மது விற்பனை செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேட்டுக் கொண்டதற்கு, ஆன்லைனில் மது பானங்களை விற்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய தங்கமணி, ஆண்மகன் ஆர்டர் செய்து விட்டு வெளியிலே செல்லும் நிலையில், அப்போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரும் அதனால் அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களை தவறாக எண்ணி, சமூகத்தில் குழப்பமான நிலை ஏற்படும் என்று கூறினார்.
அதற்கு ஆன்லைனில் மதுபானம் விற்கும் திட்டம் எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
Comments