அதிமுக ஆட்சியை விட, திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸை லாபத்தில் இயக்கிக் காட்டுவோம் - அமைச்சர் துரைமுருகன்

0 2914

அதிமுக ஆட்சியை விட, திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸை லாபத்தில் இயக்கிக் காட்டுவோம் என, அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவரிடம் சவால் விட்டார்.

சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து வாங்கும் துணியை கொச்சைப் படுத்துவது போல் திங்களன்று பேசியது சரியல்ல என கூறினார். கோ-ஆப்டெக்ஸ் நல்ல நிறுவனம்தான், ஆனால் கடந்தாண்டில் வாங்கிய துணிகள் தரமில்லாத துணிகள், அதனால்தான் விற்க விளம்பரம் கொடுக்கின்றனர், அப்படி விளம்பரம் செய்ததற்கு மட்டும் 4 கோடி ரூபாயை கடந்த அரசு செலவு செய்திருக்கிறது என அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்தார்.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கோ ஆப் டெக்ஸ் லாபத்தில் இயங்கும் என தாம் சேலஞ்ச் செய்வதாக துரைமுருகன் பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments