பாகிஸ்தானுக்கு எதிராக காபூலில் ஆர்ப்பாட்ட பேரணி சென்றவர்களை கலைத்துவிரட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய தாலிபான்கள்

0 2469

பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, காபூலில் ஆர்ப்பாட்ட பேரணி சென்றவர்களை கலைத்துவிரட்ட தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசமைப்பதில் உட்பூசல் நீடிப்பதாகவும், இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலையிட்டு மத்தியஸ்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஐஎஸ்ஐ தலைவர் ஃபெய்ஸ் ஹமீது (Faiz Hameed), காபூலில் முல்லா பராதரை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments