தாம்பரம் ரயில் நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டு, ஜார்கண்ட் மாநில இளைஞர் கைது

0 1688

சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜார்கண்ட் மாநில இளைஞனை சிசிடிவி கேமராவின் அடிப்படையில் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 5-ம் தேதி டிக்கெட் கவுண்டரில் நின்றுகொண்டிருந்த போது, கையில் ஃபைலுடன் வந்த இளைஞன் அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை லாவகமாக திருடி சென்றான்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், அதேபோல் மற்றொரு திருட்டிற்காக டிக்கெட் கவுண்டரில் ஃபைலுடன் காத்திருந்த அந்த இளைஞனை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த இளைஞர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கொமோண்டோ குமார் என்பதும், இதேபோன்று 26 விலையுயர்ந்த செல்போன்களை திருடியதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments