தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 2385

தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அரபிக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments