வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன்..! காட்டிக்கொடுத்த சிசிடிவி

0 4178

சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

துர்காதேவி நகரில் வசித்து வரும் சீனிவாசன் என்பவர் கடந்த 26-ம் தேதி வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து அரை சவரன் தங்க நகையை திருடி சென்றான்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவனை கைது செய்து, 5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments