முகக்கவசம் அணியாத ஓட்டுநருக்கு அபராதம்... காரை நிறுத்தாததால் பானட்டை பிடித்து தொங்கிய மாநகராட்சி ஊழியர்

0 1929

மும்பையில் முகக்கவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால், கார் மீது குதித்த மாநகராட்சி ஊழியர் வைப்பரை பற்றியபடி பல மீட்டர் தூரம் தொங்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

மாநகராட்சி ஊழியரான சுரேஷ், சாண்டா குரூஸ் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த கார் ஓட்டுநரைத் தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் சுரேஷ் காரின் பானெட்டை பிடித்து தொங்கியவாறு காரை நிறுத்துமாறு கத்தியுள்ளார். இருந்த போதும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் சுரேஷ் வைப்பரை பற்றியபடி பல மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

வியாழக்கிழமை அரங்கேறிய இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments