விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5000 நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 2023

மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்கியுள்ள அறிவுரைபடி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அவர், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி வீடுகளில் வழிபடுபவர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்றார்.

மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையில் 12,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்றும், அதில் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக மேலும் 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments