ஆப்கனில் நாளை தாலிபன்களின் அரசு அமையும் என தகவல்

0 1609

ஆப்கனில் நாளை தாலிபன்களின் புதிய அரசு அமையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முல்லா முகம்மது அசன் அகுந்த் அரசின் தலைவராக இருப்பார் எனவும், முல்லா பராதரும், முல்லா அப்துஸ் ஸலாமும்  துணைத் தலைவர்களாக இருப்பார்கள் எனவும் காபூல் உள்ளூர் ஊடகச் செய்தி வெளியாகி உள்ளது.

நாட்டின் தலைவராக பொறுப்பேற்பார் என கூறப்படும் முல்லா முகம்மது அசன் அகுந்த், தாலிபன்களின்  முடிவெடுக்கும் அதிகாரமிக்க அமைப்பான ரெபாரி ஷூராவின் தலைவராக கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறார்.

கடந்த முறை 1996 ல் தாலிபன்கள் ஆட்சியில் இருந்த போது,துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பல  பதவிகளை வகித்துள்ளார்.

புதிய அரசில் ஹக்கானிகளின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும், தாலிபன் நிறுவனரான முல்லா ஒமரின் மகன் முல்லா யாக்கூப் ராணுவ அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments