தங்கம்... சாமி....! அன்பா பாம்பை விரட்டிய பெண்..! கோவையன்ஸ் கிரேட்

0 3899
தங்கம்... சாமி....! அன்பா பாம்பை விரட்டிய பெண்..! கோவையன்ஸ் கிரேட்

வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு ஒன்றை செல்லமாகவும், மரியதையுடனும் வாக்குறுதி அளித்து  வழியனுப்பிவைக்கும் வீடியோ ஒன்று கோவையில் வைரலாகி வருகின்றது.

பிறரை அழைப்பதிலும், விருந்தினர்களை உபசரிப்பதிலும் கொங்குமண்டலத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு..! குறிப்பாக குழந்தையாக இருந்தாலும் சரி..., குமரியாக இருந்தாலும் சரி..., அன்பை கொட்டினால் தங்கம்...! சாமி...! கண்ணு..! என்று உருகவைத்து விடுவார்கள் அங்குள்ள தாய்மார்கள்..!

அந்தவகையில் ஒரு வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை அந்த வீட்டில் உள்ள பெண் ஒருவர், செல்லமாகவும் மரியாதையுடனும் வீட்டில் இருந்து வெளியே செல்லும் படி கூறும் வீடியோ ஒன்று கோவையில் வைரலாகி வருகின்றது

நல்லபிள்ளையா வெளியே போயிரு சாமி... உன்னோட கோவிலில் வந்து மறக்காம பால் ஊத்துறேன் என்று அந்த பெண் சொல்ல சொல்ல படம் எடுத்து ஆடியபடியே வெளியே சென்றது அந்த நாகப்பாம்பு யார் கண்ணுலயும் படக்கூடாது தங்கம்..! என்று அந்தப்பெண் சொல்ல, எப்போதும் படம் எடுத்து முன்னோக்கி பாய்ந்தே பழக்கப்பட்ட நாகப்பாம்பு படம் எடுத்தவாறே பின்னோக்கி நகர்ந்து சென்றது.

அந்த நாகப்பாம்பு பின்னோக்கி நகர்ந்து சென்ற காட்சியை பார்த்தால், ஒரு சுட்டி பாம்பு என்பதை உணர்த்துவதாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments