அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 6144

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னதாகவே, வரும் ஜனவரி முதல் அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சத்துணவு பணியாளர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.  

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் 13 அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த ஆட்சியில் அரசு அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாக வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணி நிறுத்த காலம் ஆகியவை பணிக்காலமாக முறை படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments