ஆந்திராவில் தங்கம் வாங்கச் சென்ற வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி ரூ.50லட்சம் கொள்ளை

0 2386

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து  விஜயவாடாவுக்கு தங்கம் வாங்குவதற்காக சென்ற வியாபாரியின் காரை வழிமறித்து போலீஸ் எனக் கூறி 50 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்த 7பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லூரைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பிரகாசம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் எனக் கூறி 7பேர் வழிமறித்து காரை சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் இருந்த 50லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு தங்களது வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 7பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  47 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments