ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து காஷ்மீருக்கு தீவிரவாத இயக்கங்கள் குறி?

0 3386

ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து, தாலிபான்கள் உதவியுடன் காஷ்மீரைக் கைப்பற்ற தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்வதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் அல் பத்ர் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கூடுதல் கவனத்துடன் வளர்த்து வருவது தெரியவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது காஷ்மீர் எல்லைப் பகுதியில் 200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகள் காத்திருப்பதாகக் கூறிய அவர், ஐஎஸ்ஐயின் உத்தரவுக்கு தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற நவீன ஆயுதங்களை தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் வழங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பந்திப்பூர், குப்வாரா மற்றும் பாராமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் அதிக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், இதற்காக தீவிரவாதிகளுக்கு உதவி செய்யக்கூடும் என கருதப்படும் 500 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். எனவே இந்திய பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments