தமிழகத்தில் கேரள எல்லையையொட்டிய மாவட்டங்களில் ஒரே நாளில் 10 இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போட அரசு திட்டம்

0 1992

தமிழகத்தில் கேரள எல்லையையொட்டிய மற்றும் அருகாமை மாவட்டங்களில் ஒரே நாளில் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளத்தில் நாள்தோறும் முப்பதாயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மற்றும் அருகாமையில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 12ஆம் நாள் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் மொத்தம் 20 இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments