சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரியின் டயர் வெடித்து பற்றிய தீ.. உயிர் தப்பிய ஓட்டுநர் - முற்றாக எரிந்த லாரி..!

0 4614

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியதில் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகா நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 12 சக்கரங்களைக் கொண்ட அந்த சரக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. தாளவாடி அருகே ராமநாதபுரம் பிரிவு பகுதி அருகே சென்றபோது லாரியின் டயர்களில் ஒன்று வெடித்து, அதன் இரும்பு டிரம் பகுதி உரசியதில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தீ மளமளவென லாரி முழுவதும் பரவிய நிலையில், உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிய ஓட்டுநர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வருவதற்குள் லாரி முற்றாக எரிந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments